தெக்கலூர் கிராமத்தில் தண்ணீர் வற்றிய ஏரியில் பொதுமக்கள் மீன்பிடிப்பு

திருத்தணி: தெக்கலூர் கிராமத்தில் தண்ணீர் வற்றிய ஏரியில் பொதுமக்கள் மீன் பிடித்தனர்.திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தில் ஏரி உள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டு அந்த தண்ணீரை ஏறி பாசனத்தின் மூலம் விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை போன்ற பயிர்களை செய்து வருகின்றனர். மேலும் ஏரியில் தண்ணீர் தேங்குவதால் அதில் வரால் கெண்டை, குரவை வவ்வால், கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் தண்ணீரில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஏரியில் நீர் பாசனம் குறைந்து விட்டது. மேலும் தண்ணீரும் வறண்டு விட்டதால் அதில் உள்ள மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் இறங்கி பல்வேறு வகையான மீன்களை பிடித்து தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர். சிலர் அதிகமாக பிடித்த மீன்களை தங்கள் பிடித்த உறவினர்கள் நண்பர்கள் கொடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஒரு சிலர் கிலோ கணக்கில் விற்பனையும் செய்தனர்….

Related posts

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி