தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கூட்டம்

 

திருப்பூர், அக். 6: திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான சமூக கூட்டம் நடந்தது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தார். இதில், துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் துணை ஆணையர்கள் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கௌரி சரவணன் மற்றும் உதவி ஆணையர் வினோத், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும், அதனை செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை