தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

ராமேஸ்வரம், செப். 6: ராமேஸ்வரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 110 பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்ததைவிட குறைவாகவே சம்பளம் வழங்கப்படுவதாகவும், இதை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் திரண்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த பேச்சுவார்த்தை பின் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி