தூய்மை பணியாளர்களுக்கு கயத்தாறில் மருத்துவ முகாம்

 

கயத்தாறு, செப். 25: கயத்தாறில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை துவக்கி வைத்தார். தூய்மை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் உள்ளாட்சி பணியாளர்களின்உடல் நலனை பேணும் விதமாக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கயத்தாறு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம், கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.முகாமை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை துவக்கி வைத்தார்.

இதில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு டாக்டர் காருண்யா கிரன், செவிலியர் சங்கீதா ஆகியோர் தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, வார்டு கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், தேவி கண்ணன், வழக்கறிஞர் மாரியப்பன், ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வட்டார வள மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக திருவிழா போட்டி

தூத்துக்குடி சிதம்பரநகர் சாலையில் வரும் 29ல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

திருவெறும்பூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு