தூய்மை குறித்து மாணவர்கள் கலைநிகழ்ச்சி

சேலம், செப்.28: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் தூய்மை குறித்து பள்ளி மாணவர்கள், கலைநிகழ்ச்சி நடத்தினர். சேலம் ரயில்ேவ கோட்டத்தில் தூய்மை இந்தியா இருவார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று, தூய்மை குறித்து பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா பங்கேற்று, விழிப்புணர்வு நாடகத்தை தொடங்கி வைத்தார். கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். சேலத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், ரயில்வே ஸ்டேஷனையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகம் அடங்கிய தட்டிகளை கையில் ஏந்திக் கொண்டும், முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு நாடகத்தை நடத்தினர். அதில், குப்பைகளை முறையாக அதற்கான தொட்டியில் போட வேண்டும், போதை புகையிலையை பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎப் போலீசார் கலந்து கொண்டனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்