தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை மே2 முதல் துவக்கம்

தூத்துக்குடி, ஏப்.29: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை வருகிற 2-ம் தேதி துவங்குகிறது. இந்த பள்ளியில் சேருவதற்கு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண வசதியும் செய்து தரப்படும்.மூன்று ஆண்டுகள் படித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்த ஆண்டு முதல் இசை ஆசிரியர்களுக்கான வளாக நேர்காணல் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. மேலும் விவரங்களுக்கு இசைப்பள்ளி தலைமைஆசிரியை, தூத்துக்குடி 2 என்ற முகவரியிலும்,தொலைபேசி எண் 9487739296 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு