தூத்துக்குடி மாவட்டத்தில் 240 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்

தூத்துக்குடி,அக்.8: தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டில் 240 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 240 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். அக்டோபர் 2023ம் மாதம் முதல் பிப்ரவரி 2024ம் மாதம் முடிய நடத்தப்படும் முகாம்களில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் சிறந்த மூன்று விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை