தூத்துக்குடி மாநகர பகுதியில் 12ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி, ஆக. 8: தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வரும் 12ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்புக்கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வரும் 12ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவர்கள் பாதிப்பு பாலிடெக்னிக் கேன்டீனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

சென்னை மாநகரில் 120 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

சென்னையில் ஆண்டுதோறும் 28,000 தெருநாய்களுக்கு கருத்தடை: மாநகராட்சி முடிவு