தூத்துக்குடி மாநகரில் இடி மின்னலுடன் மழை

தூத்துக்குடி, ஜூலை 13: தூத்துக்குடியில் நேற்று மாலை இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியசுக்கு மேல் காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மாநகரின் மட்டக்கடை, பொன்னகரம் 2ம் கேட், 4ம் கேட், பிரையண்ட்நகர், மணிநகர், 3வது மைல், கால்டுவெல் காலனி, கடற்கரை சாலை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. திடீர் மழை காரணமாக கோடை வெயில் தணிந்து குளிர்ந்த காற்று வீசத்துவங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி