தூத்துக்குடி மருத்துவர் வெற்றி

தூத்துக்குடி, மே 4: குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று 143வது இடம் பிடித்த தூத்துக்குடி மருத்துவர் நித்திலா பிரியந்திக்கு தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 2023-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்த மருத்துவர் நித்திலாபிரியந்தி வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் 143வது இடம் பிடித்தார். அவருக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மற்றும் மருத்துவரின் பெற்றோர்கள் சுபாஷ் சந்திரபோஸ், திலகா ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்