தூத்துக்குடி பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் சீரமைப்பு பணி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி,டிச.13: தூத்துக்குடி பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் நடைபெறும் சீரமைப்பு பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமாருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகரின் பிரதான கால்வாய்யான பக்கிள் ஓடையின் முகத்துவாரத்தில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இப்பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமாருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே கான்கிரீட் அமைத்தல், பேவர் பிளாக், வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை அகலப்படுத்துவதற்கான பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகர செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற் பொறியாளர் சரவணன், மாநகர சுகாதார அதிகாரி டாக்டர் சுமதி, மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ்,பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, முன்னாள் கவுன்சிலர் முத்துசெல்வம், செல்வகுமார், மீனவர் அணி மாநகர அமைப்பாளர் டேனியல், வட்ட பிரதிநிதி மார்ஷல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்