தூத்துக்குடி டேவிஸ்புரம், மட்டக்கடை பகுதிகளில் ஆய்வு புதிய சாலைகள் அமைக்கும் பணி ஆகஸ்டில் நிறைவு

தூத்துக்குடி, ஜூன் 9: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் அமைக்கும் பணிகளானது ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடையும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 15வது நிதி குழு மூலமாக பொது நிதியில் இருந்து 65 கி.மீ. தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகிறது. அந்தவகையில் டேவிஸ்புரம், மட்டக்கடை உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் வேகத்தடைகள் அமைக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் இந்த சாலை பணிகளை விரைவாக முடிக்கவும், சாலைகள் ஒப்பந்தம் வழங்கப்பட்ட அளவில் அமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘தூத்துக்குடி மாநகர் பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களில் முதல் கட்டமாக சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து குறுக்குத் தெருக்களில் சாலைகள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்துப் பகுதிகளிலும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சாலைப்பணிகள் நிறைவடையும்’’ என்றார். ஆய்வின்போது துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், தனலட்சுமி, மாநகர மீனவர் அணி டேனியல், மாநகர திமுக பொருளாளர் அனந்தையா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஞானசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை