தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இரு அலகுகள் நிறுத்தம்: 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3-வது அலகுகள் நிறுத்தப்பட்டதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக 5 அலகுகளிலும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், 2 மற்றும் 3-வது அலகுகள் திடீரென இன்று நிறுத்தப்பட்டன. பராமரிப்பு பணி காரணமாக இரு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 அலகுகள் நிறுத்தப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.    …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு