தூத்துக்குடியில் 24,25ம்தேதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்கிறார் அமைச்சர் கீதாஜீவன்

 

தூத்துக்குடி, ஏப்.22:அமைச்சர் கீதாஜீவன் வரும் 24, 25மற்றும் 27, 28, 29ம் தேதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று(22ம் தேதி) காலை 10மணிக்கு தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெறும் நம்ம ஊரு நம்ம பெருமை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனைத்தொடர்ந்து மதியம் 12மணிக்கு பாளை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெறும் பெண்கள் மாநாட்டிலும், மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி புத்தகத் திருவிழாவிலும் கலந்துகொள்கிறார்.

தொடர்ந்து 23ம்தேதி காலை 10.30 மணிக்கு கோவில்பட்டி தனியார் விழாவிலும், 24,25ம் தேதிகளில் காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிகிறார். 25ம் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்கிறார். அதன்பின்பு, 26ம் தேதி காலை 10.30 மணிக்கும், 27, 28, 29ம் தேததிகளில் காலை 10.30மணிக்கு  தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்கிறார். 30ம் தேதி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறும் மாரத்தான் போட்டியையும், மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியையும் தொடங்கி வைக்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு