தூத்துக்குடியில் மது விற்ற வாலிபர் பிணைப்பத்திரம் வழங்கி உறுதிமொழி

தூத்துக்குடி, மே 7: தூத்துக்குடியில் மது விற்ற வாலிபர் பிணைப்பத்திரம் வழங்கி உறுதிமொழி ஏற்றார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெவிஞ்சிபுரம் மெயின்ரோடு பகுதியில் கடந்த 1ம் தேதி சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ராஜ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில், கடந்த 3ம் தேதி தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் ஒன்றின் (பொறுப்பு) நடுவர் குபேரசுந்தர், குற்றம்சாட்டப்பட்ட ராஜூக்கு ரூ.200 அபராதம் விதித்தார். மேலும், ராஜ் அன்றைய நாளிலிருந்து 3ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று ஜாமீன்தாருடன் உறுதிமொழி ஏற்று ரூ.10ஆயிரம் நிர்ணயம் செய்து பிணைப்பத்திரம் பெற்று தீர்ப்பு கூறினார். இப்பிணை காலத்தில் அவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் பிணை காலமானது 3 ஆண்டுகள் சிறை தண்டணையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை