தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி,பிப்.20:தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருபவர், இங்குள்ள ஆயுதப்படை காவலர்களுக்கான குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதுகுறித்து தெரியவந்ததும் அவரை மீட்ட உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு