தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்ற 7 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக நேற்று முன்தினம் அதிகாலை இலங்கைக்கு கடத்த முயன்ற 550 கிலோ ஏலக்காயை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை கியூ பிரிவு போலீசார் கடற்கரையோரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாளமுத்துநகர் அருகே வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு படகில் ஏற்றுவதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு இருந்த 450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.படகில் கடத்தி செல்வதற்கு தயாராக இருந்த தூத்துக்குடியை சேர்ந்த கணேசன் (49), மாரிகுமார் (32), பன்னீர்செல்வம் (42), யோகேசுவரன் (41), இசக்கிமுத்து (40), வினீத் (25), கடலூரை சேர்ந்த மன்சூர் அலி (37) ஆகிய 7 பேரை கைது செய்தனர். விசாரணையில், சென்னையில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்களை ஏஜென்ட்டுகளாக பயன்படுத்தியுள்ளனர். முறையாக ஒப்படைக்கப்படுவதை கண்காணிக்க மன்சூர் அலியையும் உடன் அனுப்பி வைத்து உள்ளனர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ கஞ்சா, லோடு ஆட்டோ, 3 பைக்குகள், 9 செல்போன்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது