தூண்டில் போட்டு மீன்பிடிப்பதில் ஆர்வம்

 

தேனி, ஜன. 9: தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி பகுதியில் வைகை நீர்பிடிப்பு பகுதியில் தேங்கியுள்ள நீரில் இப்பகுதி கிராமத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதில் கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. மேலும், கண்மாய்களில் நீர்நிரம்பி ஏராளமான கண்மாய்கள் மறுகால் பாய்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற அணையான வைகை அணையில் மொத்தமுள்ள 71 அடியில் தற்போது 71 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான அரப்படித்தேவன்பட்டி, குன்னூர் கிராமங்கள் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. இதில தேனியில் இருந்த மதுரை செல்லும் சாலையில் இவ்விரு கிராமங்களிலும் உள்ள வயல்வெளிகளில் வைகை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து, இப்பகுதி கிராம மக்கள் தூண்டில்களுடன் வயல்வெளிகளில் தூண்டிலை தூவி மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராம மக்கள் சாலையோரம் தேங்கியுள்ள வைகை அணை நீரில் மீன்களை பிடிப்பதை இச்சாலையில் செல்லும் வாகனங்களில் பயணிப்போர் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை