துவாரகா பகுதியில் வயதான தம்பதி மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி? ஆள்மாறாட்டம் செய்த பெண் திடீர் கைது

புதுடெல்லி: துவாரகாவை சேர்ந்த வயதான தம்பதி சாந்தி சுவரூப் அரோரா(79), அவரது மனைவி அஞ்சனா அரோரா(62) இருவர் மீதும் கடந்த ஞாயிறன்று மாலை 6.30 மணியளவில் எதிரே வந்த கார் மோதியது. இதில் இருவரும் தலைகுப்புற விழுந்து காயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாக காரை ஓட்டி வந்த தீபாக்‌ஷி சக்ரவர்த்தி(30) என்கிற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகி–்ன்றனர். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் குறித்து பாதிக்கப்பட்ட தம்பதியின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். இதுபற்றி போலீசார் கூறுகையில், “தீபாக்‌ஷி சவுத்ரி காயமடைந்தவர்களுடன் மணிப்பால் மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் விபத்து ஏற்படுத்திய காரை தான் ஓட்டிவந்ததாக கூறியதோடு, அவர் தனது ஆவணங்களையும் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அவரது சகோதரி தான் காரை ஓட்டி வந்ததாக சந்தேகத்தை எழுப்பினர். இதையடுத்து, உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி விசாரித்து சரிபார்க்கப்பட்டது. அதில், முதிய தம்பதி மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியது தீபாக்‌ஷியின் மூத்த சகோதரி நுபுர் என்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரை கைது செய்துள்ளோம்”என்றார். கைதாகியுள்ள நுபுர், உத்தம்நகரில் உள்ள வங்கி கிளை ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது….

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்