துவரங்குறிச்சி அருகே வயலில் கிடந்தது மலைப்பாம்பு விவசாய பெண்கள் ஓட்டம்-தீயணைப்புத்துறையினர் மீட்பு

மணப்பாறை : மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகேயுள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(57), விவசாயி. நேற்று இவரது தோட்டத்தில் உள்ள நெல் வயலில் அறுவடை பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது வயலின் நடுவே மலைப்பாம்பு ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ந்த பெண்கள் அறுவடை பணியை நிறுத்திவிட்டு உடனடியாக வயலிலிருந்து ஓடினர். பின்னர், இது குறித்த தகவல் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் நாகேந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று துறை கருவிகள் உதவியுடன் 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மலைப்பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விட்டனர். வயலில் மலைப்பாம்பு கிடப்பதாக தகவல் பரவியதையடுத்து ஏராளமான மக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு வந்து தங்களது செல்போனில் பாம்பை வீடியோ எடுத்தனர்….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா