துறையூர் பகுதியில் தொடர் மழை அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

 

துறையூர், ஜூன் 8: திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பெய்த மழையினால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். துறையூர் அடுத்த சேனப்பநல்லூர் , சேனப்பநல்லூர் புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் குருவை நெல் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த. 4 நாட்களாக காற்றுடன் கூடிய பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர் .எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை