துறையூர் சிவன் கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி

துறையூர்: துறையூர் சிவன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி அளிக்கப்பட்டது.துறையூர் ஆத்தூர் சாலையிலுள்ள சம்பத்கெளரி உடனுறை நந்திகேஸ்வரர் சிவன் கோயிலில் விஜயதசமியையொட்டி சரஸ்வதி தேவிக்கு பால் பழம் தயிர் தேன் பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பு சிவன் கோயில் சென்று அர்ச்சனை செய்து அர்ச்சகர் வேதம் முழங்க உயிரெழுத்து அகர எழுத்துப் பயிற்சியை அரிசியில் எழுத வைத்து பயிற்சி அளித்தனர்.
அதன் பின்னர் தாங்கள் விரும்பிய பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்த்தனர்.நிகழ்ச்சி 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்