துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

ஓசூர், மே 4: மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடியில் தங்கி உள்ளார். இவரது மனைவியுடன் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று முன்தினம், இருவரும் ஓசூர் நகர் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரகுமார்(24) என்பவர், லட்சுமணனின் மனைவியிடம் தகராறு செய்தார். இதை தட்டி கேட்ட லட்சுமணனை, சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில், ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி, ஈஸ்வரகுமாரை கைது செய்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு