துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல்:2 பேர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.50 லட்சம் மதிப்புடைய 1.086 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், துபாயில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து சந்தேகத்துக்கு இடமான பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். பையில் துணிகளுக்கு இடையே செயின்கள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 8 புதிய தங்க செயின்கள் இருந்தன. மொத்த எடை 856 கிராம். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதே விமானத்தில் வந்த, சென்னையை சேர்ந்த மற்றொரு வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனையிட்டபோது, எதுவும் இல்லை. ஆனால் அவர் அணிந்திருந்த சட்டை காலர் பெரிதாக இருந்ததால் சோதனையிட்டனர். காலர் பகுதியில் 230 கிராம் தங்கப்பசையை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். ஒரே விமானத்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து, ஒரு கிலோ 86 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம். இருவரையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது