துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா குறித்து தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டாரா?: கவர்னர் மாளிகை மறுப்பு

சென்னை: துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா மீது விளக்கம் கேட்டு, தமிழக  அரசுக்கு ஆளுநர் எழுதியதாக பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் தவறு  என ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவையும் மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் 25ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்து ஆலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.புதிய மசோதாக்கள் கல்வியாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க கோரி தமிழக அரசு அந்த மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.இந்த மசோதாக்கள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கிடையில், இந்த மசோதா குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் சில சந்தேகங்கள் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் எனவும், துணைவேந்தர்களை அரசே நியமிப்பது என்பது பல்கலைக்கழக சட்டத்திற்கு புறம்பானது. இது அரசியல் தலையீட்டுக்கு வழி வகுக்கிறது எனவும், இதற்கான விளக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும் என ஆளுநர் கோரி உள்ளதாக பத்திரிகை ஒன்றில் நேற்று செய்தி வெளியானது. இந்த செய்தி முற்றிலும் தவறு என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. அப்படி எந்த ஒரு கடிதமும் ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பவில்லை என்றும் தெரிவித்தனர். அதேபோல, தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுபோன்ற கடிதம் ஏதும் வரவில்லை என கூறினர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை