தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். மேடையில் பேசிய அவர், “9.3 % பெண்களும், 31% ஆண்களும் தமிழகத்தில் புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர். 13,080 பள்ளிகளில் தொடர் புகையிலை ஒழிப்பு கண்காணிக்கப்படுகிறது. 1,344 கல்லூரிகள் புகையிலை இல்லா நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு பயந்து மட்டுமல்லாமல், மனசாட்சிக்கு பயந்து போதைப் பொருட்களை விற்பனை செய்வதை விற்பனையாளர்கள் நிறுத்த வேண்டும்” என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 3500 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு, கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும். பான்பராக், குட்கா விற்க கர்நாடகாவில் தடை இல்லை என்பதால் பெங்களூருவில் இருந்து காய்கறி வண்டியில் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார். குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது