தீவிரமடையும் ரஷ்யா – உக்ரைன் போர்; உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி அவசர ஆலோசனை.!

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார். உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.மேலும், தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாகவும் ரஷ்ய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தை கூட்டி உக்ரைன் விவகாரம் மற்றும் ஆபரேஷன் கங்கா ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவாதித்து வருகிறார்….

Related posts

அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் சிறப்பு விடுப்பு!

நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்: தேடும் பணி தீவிரம்

ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை