தீயில் மரங்கள் எரிந்து நாசம்

தொண்டி,செப்.27: நம்புதாளை கண்மாய் பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயால் கருவேல மரங்கள் எரிந்து நாசமாகியது. தொண்டி அருகே நம்புதாளையில் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக பாசன கண்மாய் உள்ளது. இதன் உள்பகுதியில் அதிகமான கருவேல மரங்கள் உள்ளது. நேற்று மர்ம நபர்கள் இக்கண்மாயின் உள் பகுதியில் தீயை வைத்துள்ளனர். காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் தீ மளமளவென பிடித்து எரிந்ததில் கருவேல மரங்கள், புல் உள்ளிட்டவை எரிந்து நாசமாகியுள்ளது. தானாக தீ அணைந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விவசாயி பதினெட்டாம்படியான் கூறியது, மர்ம நபர்கள் வைத்த தீயில் கருவேல மரங்கள் எரிந்ததோடு புல் உள்ளிட்ட கால்நடை தீவனங்களும் எரிந்து விட்டது. இதனால் ஆடு,மாடு மேய்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அக்.20ல் 20 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்: வீரபாண்டி கோயிலில் நடக்கிறது