தீபாவளி விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: 80 சதவீத மாணவர்கள் வருகை என தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பிறகு வழக்கம் போல  பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வுக்கு தயாராக வேண்டி உள்ளதால் 80 சதவீத மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர். தீபாவளி பண்டிகைக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த  வாரம் 22ம் தேதியில் இருந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. 24ம் தேதி  தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாளான 25ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டதாலும், அதே நாளில் தீபாவளி நோன்பு என்பதாலும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 26ம் தேதியான நேற்று வழக்கம் போல பள்ளிகள் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின.இதனால், நேற்று காலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியரின் வருகைப்பதிவு செயலி மூலம் பதிவு செய்யப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 32 ஆயிரம் பள்ளிகளில் 80 சதவீத மாணவ-மாணவியர் வருகைபுரிந்தனர். இதையடுத்து, டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால், அதற்கான பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும் என்றும், அதை உரிய செயலி மூலம் பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நேற்றைய பாடத்திட்டம் மற்றும் வகுப்புக்கான பாடம், ஆகியவற்றை பதிவு செய்து அனுப்பினர். பின்னர் அரையா ண்டுக்கு தேர்வுக்கான பாடங் களை ஆசிரி யர்கள் நடத்த துவங்கினர்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு