தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளான இன்று சென்னை தியாகராயநகரில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளாமான மக்கள் குவிந்தனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் புத்தாடை மற்றும் இதர பொருட்கள் வாங்க சென்னை தியாகராயநகரில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தியாகராயநகரில்  இன்று காலை முதலே ஏராளமானோர் தங்கள் குடும்பத்தோடு குவிய தொடங்கினர்.   இதேபோன்று பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுவாகவே சென்னையை பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கும்.  ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்ததால் தியாகராயநகர், பாண்டிபஜார், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்