தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடு: அமைச்சர்கள் நாளை ஆலோசனை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து நாளை அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி(திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து 28ம் தேதி (நாளை) ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஆலோசனைக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை