(தி.மலை) 30,718 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் 125 தேர்வு ைமயங்கள்: பறக்கும் படை கண்காணிப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

திருவண்ணாமலை, மார்ச் 12: திருவண்ணாமலை மாவட்டத்தில், நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 30718 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 138 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நாளை தொடங்கி, அடுத்த மாதம் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான்று தமிழ் மொழிப்பாடத் தேர்வு நடக்கிறது. அதைத்தொடர்ந்து, வரும் 15ம் தேதி ஆங்கில மொழிப்பாட தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. காலை 10.10 மணிவரை வினாத்தாளை படித்துப் பார்க்கவும், 10.10 மணி முதல் 10.15 மணிவரை தேர்வு எழுதும் மாணவரின் விபரங்களை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 10.15 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 15,467 மாணவர்கள், 15,451 மாணவிகள் உள்பட ெமாத்தம் 30,718 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு 120 மையங்கள், தனித்தேர்வர்களுக்கு 5 மையங்கள் உள்பட மொத்தம் 125 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் ெமாத்தம் 8 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வினாத்தாள்களை கொண்டுசெல்லவும், விடைத்தாள்களை கொண்டுவந்து சேர்க்கவும் 32 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வினா, விடைத் தாள்களை கொண்டுசெல்லும் வழித்தட அலுவலர்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க, 125 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 125 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,875 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, 138 பேர் கொண்ட பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கலெக்டர், டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகளும் நேரடியாக தேர்வு மையங்களை ஆய்வு செய்ய உள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (14ம் தேதி) பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதில், மாவட்டம் முழுவதும் 13463 மாணவர்கள், 14,246 மாணவிகள் உள்பட மொத்தம் 27,709 பேர் தேர்வு எழுத உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன….

Related posts

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா வரும் 7ம் தேதி தொடங்குகிறது திருவண்ணாமலை

விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்த விவசாயி கலசபாக்கம் அருகே பரபரப்பு பட்டா மாற்றத்துக்கு அலைக்கழிப்பதாக

கிணற்றில் குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை செல்போன் கேம் விளையாடியதை கண்டித்ததால்