(தி.மலை) நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம் வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில்

வந்தவாசி, மார்ச் 1: வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு நேற்று அகற்றப்பட்டது. வந்தவாசி நகராட்சி பழைய பஸ் நிலையத்தின் உள்பகுதியில் வளையல், விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடை குத்தகைதாரர் வாடகை செலுத்த வேண்டி நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான ஊழியர்கள் நேற்று வாடகை வசூலிக்க சென்றனர். அப்போது, கடை குத்தகைதாரர் நான் வளையல் வியாபாரம் செய்து வருகிறேன். நடைபாதையிலும் கடை வைத்துள்ளதால் வியாபாரம் குறைவாகிறது. வாடகை கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. ஆக்கரமிப்பு கடைகளை அகற்றினால் வாடகை செலுத்துவதாக கூறினார். அதை தொடர்ந்து நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மோகன் தலைமையில் ஊழியர்கள் நடைபாதையில் ஆக்கரமித்து வளையல், பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து குத்தகைதாரரிடம் வாடகையை வசூலித்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை