தி.மலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் 10 லட்சம் டன் கொள்முதல்: ஆட்சியர், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு விவசாயிகள் நன்றி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 10 லட்சம் டன் நெல்கொள்முதல் செய்த மாவட்ட நிர்வாகம், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு நன்றி தெரிவித்து,பட்டாசு வெடித்து அதிகாரிக்கு வேல் வழங்கி மகிழ்ந்தனர். அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம், ஜனவரி 10 முதல் ஜூலை 4ம் தேதி வரை 20 லட்சம் மூட்டைகளுக்கு மேல் லாபகரமான விற்பனையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி 10 லட்சம் டன்  நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மற்றும் உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வேங்கைக்கால் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளருக்கு 5 அடி உயரம் கொண்ட வேலை வழங்கினர். சொர்ணவாரி குறுவை கொள்முதல் செய்ய நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை வரவும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.       …

Related posts

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…