தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது

சென்னை, செப்.14: சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண், போதை தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக தொடங்கி உள்ளார். உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் இயங்கும் இந்த சிறப்பு பிரிவு, போலீஸ் கமிஷனர் அருண் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் கும்பலை மட்டுமே இந்த பிரிவு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தி.நகர் காவல் மாவட்டத்தில் ‘போதை தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் நேற்று அதிரடி வேட்டை நடந்தது. இதில், கோடம்பாக்கம் காவல் எல்லையில் கஞ்சா விற்ற கெல்லீஸ் பகுதியை சேர்ந்த அஜித் (22), கோடம்பாக்கம் காமராஜ் காலனியை சேர்ந்த தினகரன் (25) மற்றும் அசோக் நகர் காவல் எல்லையில் கஞ்சா விற்ற ஆகாஷ் (26), அரவிந்த் (20), ஸ்டாலின் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், பாண்டி பஜார் காவல் எல்லையில் கிண்டி வேளச்ேசரி சாலையை சேர்ந்த ரமேஷ்குமார் (44), மணிகண்டன் (29) கே.கே.நகர் காவல் எல்லையில் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (25), அசோக் நகரை சேர்ந்த கார்த்திக் (22), எழில்நகரை சேர்ந்த ‘சி’ கேட்டகிரி ரவுடியான கார்த்திகேயன் (எ) வல்லரசு (22), விருகம்பாக்கத்தை சேர்ந்த பாக்கியராஜ் (21), ஜெகதீஷ் (20), கே.கே.நகரை சேர்ந்த தினேஷ் (18), அஜித்குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வடபழனி காவல் எல்லையில் வடபழனியை சேர்ந்த ரவுடி ஆசார் அலிகான் (22), சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (20), விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த உமர் அலி (27), மோகன்ராஜ் (26), துரையரசன் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர்.நகர் காவல் எல்லையில் சூளை பள்ளம் பகுதியை ேசர்ந்த பி கேட்டகிரி ரவுடியான செல்வமணி (25), பிரகாஷ் (19), பாலாஜி (43) ஆகியோர் என தி.நகர் காவல் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்ற ரவுடிகள் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

புளியந்தோப்பில் 76 பேர் கைது: புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின் பேரில், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 11 பேரும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 11 பேரும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 19 பேரும், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 13 பேரும், ஓட்டேரி காவல் நிலையத்தில் 10 பேரும், பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் 7 பேரும், திருவிக நகர் காவல் நிலையத்தில் 2 பேரும், செம்பியம் காவல் நிலையத்தில் 3 பேர் என மொத்தம் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்