தில்ஷாத் கார்டர்ன் பகுதியில் சிட்டு மீள்குடியேற்றப்பணிகளை மீண்டும் தொடங்க முடிவு: டெல்லி மேம்பாட்டு ஆணையம் தகவல்

புதுடெல்லி: கிழக்கு டெல்லியின் தில்ஷாத் கார்டர்ன் பகுதியிலுள்ள சிட்டு மீள் குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகளை டெல்லி மேம்பாட்டு ஆணையம்(டிடிஏ) மீண்டும் தொடங்கியுள்ளது. டெல்லி மேம்பாட்டு ஆணையம் சார்பில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு டெல்லியின் தில்ஷாத் கார்டர்ன் பகுதியிலுள்ள சிட்டு மீள் குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு திட்டப்பணிகளை மேற்கொள்ள டிடிஏ முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பப்ளிக்-பிரைவேட்-பார்ட்னர்ஷிப் அடிப்படையில்(பிபிபி)  தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்றாக இத்திதிட்டத்தில் தனியார் பங்குதாரரை தேர்வு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மறுவாழ்வளிக்கப்பட வேண்டிய  குடிசைவாழ் குடும்பங்களின் தோராயமான எண்ணிக்கை 3,367 ஆகும். திட்டப்பகுதி 6.23  ஹெக்டேர் என்கிற அளவிலும், திட்ட செலவு 468.10 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான  குடிசைவாசிகள் 60 சதவீத நிலப்பரப்பில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள். தகுதிவாய்ந்த ஒவ்வொரு குடிசைவாழ் குடியிருப்பாளருக்கும்  சுமார் 28 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு குடியிருப்பு   வழங்கப்படும். அகட்டுமானப்பணிகளின்போது, ​​குடியிருப்பாளர்களுக்கு  தற்காலிகமாக இடமாற்றம் செய்ய மாதத்திற்கு  6,000 வாடகை உதவி  வழங்கப்படும். இந்த மறுசீரமைப்பு பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது….

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்