திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குலசேகரம்: குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் எப்போதும் களைகட்டும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது வெயில் காரணமாக மிதமான அளவே தண்ணீர் பாய்கிறது. இருப்பினும் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் மிகுதியால் சிறுவர் நீச்சல் குளத்தில் ஆண்களும், பெண்களும் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் இருகரைகளிலும் உள்ள இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டிருந்ததால் திற்பரப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது….

Related posts

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கோரி அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

”உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!