திறனாய்வுச்செம்மல் விருது பெற அக்டோபர் 3ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

 

தஞ்சாவூர், செப்.30: திறனாய்வுச்செம்மல் விருது பெற அக்டோபர் 3ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- பேராசிரியரும் தமிழறிஞருமான ந.சுப்புரெட்டியார் கல்வி அறக்கட்டளை சார்பாக 2023ம் ஆண்டுக்கான திறனாய்வுச்செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்மொழி, இலக்கியம் , தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.

2023ம் ஆண்டிற்கான விருது 2021-22ம் ஆண்டுகளில் தமிழ்ச்சமூக மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்த ஆய்வுகளை செய்தோர், உரிய நூல்கள், தன் விவரக்குறிப்புடன் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையோரை பிறரும் பரிந்துரை செய்யலாம். விருதுக்கு தனியொரு நூலோ, ஒட்டுமொத்த பங்களிப்போ கவனத்தில் கொள்ளப்பெறும் விண்ணப்பங்கள், பரிந்துரைகள் அக்டோபர் 3ம்தேதிக்குள் ந.சுப்புரெட்டியார்-திறனாய்வுச்செம்மல் விருது, பதிவாளர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 10 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு