திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பியதையொட்டி நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி இன்று (10.9.2022) நீலாங்கரையில் உள்ள அவரது  இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். முன்னதாக, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து முதலமைச்சர், பாரதிராஜா மனைவியை தொலைபேசி வாயிலாக  தொடர்புக் கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். தற்போது பாரதிராஜா நலம் பெற்று இல்லம் திரும்பியதையடுத்து முதலமைச்சர் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர். …

Related posts

எடப்பாடி குறித்து சர்ச்சை கருத்து அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு: அதிமுகவினர் மீது வழக்கு

தமிழக காங்கிரசில் விரைவில் நிர்வாகிகள் மாற்றம் கட்சி கட்டமைப்பு குறித்து ராகுல் காந்தியிடம் அறிக்கை: கலந்தாய்வு கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேச்சு

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1100 வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி திறப்பு