திருவொற்றியூர் டோல்கேட் அருகே டேங்கர் லாரியில் எண்ணெய் கசிவு; போக்குவரத்து பாதிப்பு

திருவொற்றியூர்: செங்குன்றத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (49). டேங்கர் லாரி டிரைவர். இவர், நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து வியாசர்பாடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய பாமாயில் நிரப்பிய டேங்கர் லாரியை ஓட்டிச் சென்றார். திருவொற்றியூர் டோல்கேட் அருகே சென்றபோது, டீ குடிப்பதற்காக லாரியை சாலை ஓரம் சிறிது நேரம் நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, டேங்கின் வால்வில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு, சாலையில் வழிந்தோடியது. இதனை பார்த்த டிரைவர், வால்வு ஓட்டையை அடைக்க முயன்றார். அப்போது வால்வு முழுவதும் திறந்து எண்ணெய் குபுகுபுவென கொட்டியது. உடனே சுதாரித்துக் கொண்ட வேலாயுதம் போராடி வால்வை அடைத்தார். அதற்குள் வெளியேறிய பாமாயில் சாலையில் தேங்கி நின்றது. இது தெரியாமல் அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்தவர்கள் வழுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து, லேசாக சிராப்புக்கு ஆளாகினர். தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணலை போட்டு சரி செய்தனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை