திருவொற்றியூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம்

திருவொற்றியூர், ஏப். 13: சென்னை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். முகாமில் ஓய்வூதியம், மூன்று சக்கர வண்டி, தையல் இயந்திரம், இலவச வீடு, வேலைவாய்ப்பு, அடையாள அட்டை கோரி 70க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு, விரைவில் பயனாளிகளுக்கு வேண்டிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில், திருவொற்றியூர் தாசில்தார், கிராம அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி