திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் திரைப்படத் தயாரிப்பு பயிற்சி பட்டறை

திருவள்ளூர், ஜூலை 3: சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை சார்பில் திரைப்படத் தயாரிப்பு குறித்து 5 நாட்கள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் சாய் சத்யவதி, கல்லூரி முதல்வர் மாலதி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரைப்பட வல்லுநர்கள் கலந்துகொண்டு மிகச்சிறந்த கற்றல் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கினர். முதல் நாள் முதல் அமர்வில் திரைப்பட நடிகர் ஆர்.டி.பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திரைக்கதை மேம்பாடு, உரையாடல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2ம் அமர்வில் இயக்குனர் ராஜ்தீப் திரைப்பட இயக்கம் பற்றியும், ஒளிப்பதிவாளர் ரமணன் ஒளிப்பதிவு பற்றிய நடைமுறை ஒளி விளக்கங்கள் பற்றியும் விளக்கினர். மேலும் 2ம் நாள் ரெஜீஷ் திரைப்படத் தொகுப்பு பற்றியும், தரணிபதி ஒலிப் பொறியியல் பற்றியும் விளக்கினர்.

3ம் நாள் சரவணகுமார் விசுவல் எபெக்ட்ஸ் பற்றியும், பிரவீன் குமார் நடிப்பாற்றல் பற்றியும் விளக்கினர். 4ம் நாள் பொது சேவை அறிவிப்பு குறித்து செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டது. 5ம் நாள் நடைபெற்ற விழாவில் ஆதவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்