திருவேங்கடமுடையான் திருக்கோயிலுக்கு சொந்தமான 1150 சதுர அடி பரப்பிலான கட்டிடம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது

சென்னை: திருவேங்கடமுடையான் திருக்கோயிலுக்கு சொந்தமான 1150 சதுர அடி பரப்பிலான கட்டிடம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை, அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயிலுக்கு சொந்தமான 1150 சதுர அடி பரப்பிலான கட்டிடம் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, பைராகிமடம், அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயிலுக்கு சொந்தமான 1150 சதுர அடி கட்டிடம் N.S.C போஸ் ரோட்டில் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தினை திருமதி லதா மகேஷ்வரி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததால், இவர் மீது சென்னை இணை ஆணையர் மண்டலம் – 1 அவர்களின் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78-ன்படி வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பின்படி இன்று (09.09.2022) வருவாய் மற்றும் காவல் துறை உதவியுடன் அக்கட்டிடம் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை