திருவெற்றியூரில் 2 ஆண்டுக்கு பிறகு திருவிழாவிற்கு தயாராகும் தேர்

திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் கொரோனா காரணமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது திருத்தேர் தயார் செய்யப்பட்டு வருகிறது. திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத மேகநாதசுவாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சித்திரை மற்றும் ஆடி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழாக்கள் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. விழாவின் சிறப்பு நிகழ்வாக ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர் ஓடாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா துவங்க உள்ளது. இதையடுத்து தேரோட்டம் நடத்துவதற்காக தேர் தயார் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 7ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. இதையடுத்து தேர் சரிபார்க்கப்பட்டு மேலே கலசம் கட்டும் பணி மற்றும் அலங்கார துணி ஆகியவற்றை கட்டும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது….

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி