திருவெறும்பூர் அருகே தலைவெட்டி அய்யனார் கோயில் ஆடி திருவிழா

திருவெறும்பூர், ஆக.7: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலனி காமதேனு நகரில் உள்ள  பூரணா புஷ்கல சமூக தலைவட்டி அய்யனார் கோவில் ஆடி மாத திருவிழா நடந்தது. கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 4ம் தேதி பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அய்யனாருக்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு நிகழ்வாக நேற்று மருளாளிக்கு சாமி வரவழைக்கப்பட்டு குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அரிவாள் மீது ஏறி மருளாளி பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார்.இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்