திருவெறும்பூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

 

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி திருவிக நகரை சேர்ந்தவர் பாலாஜி(28). இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பாலாஜி தனது மனைவி ராஜேஸ்வரியை விராலிமலை கோயிலுக்கு அழைத்து சென்று வந்தார். மதியம் வீட்டில் மனைவியை விட்டுவிட்டு பாலாஜி கடைவீதிக்கு சென்றுள்ளார்.

பாலாஜியின் தாய் மருமகள் ராஜேஸ்வரியை சாப்பிட அழைத்தபோது, அவர் கோபித்து கொண்டு சாப்பிட வரவில்லையாம். பின்னர் மாலையில் மீண்டும் அழைக்க சென்று பார்த்தபோது வீட்டில் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கத்திப்பார்த்தும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் திருச்சி ஆர்டிஓ தவச்செல்வம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது

அரசு மருத்துவமனையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி

சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்