திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 20: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் காணிக்கை பணம் திருடு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் மதுரைவீரன் கோயிலில் அதேகிராமத்தைச் சேர்ந்த துளக்கண்ணன் மகன் ராசக்கண்ணு (61) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இக்கோயிலுக்கு கடந்த மே மாதம் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏழு மணி அளவில் பூஜை முடிந்து வீட்டிற்கு சென்ற பூசாரி ராசக்கண்ணு மீண்டும் நேற்று காலை 6 மணி அளவில் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோயிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திறந்து கிடந்துள்ளது. பின்னர் உண்டியலை பார்த்தபோது 200 ரூபாய் பணத்தை மட்டும் விட்டு விட்டு, கும்பாபிஷேகத்தின்போது பகதர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் ரூபாய் ஒரு லட்சம் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ஏனாதிமங்கலம் ஊராட்சி தலைவர் விஜயன் இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை