திருவில்லிபுத்தூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளி மான் காயம்: பொதுமக்கள் மீட்டனர்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே தெருநாய்கள் கடித்ததால் காயமடைந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவில்லிபுத்தூரில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அமைந்துள்ளது.இதனை குன்னூர் பீட் என்று வனத்துறையினர் அழைக்கின்றனர். இந்த பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள், சருகு மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக தண்ணீர் மற்றும் உணவுக்காக மலை அடிவாரப்பகுதி அருகே உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். இதன்படி, நேற்று முன்தினம் மாலை கடந்த பிறகு மான்கள் கூட்டமாக அம்மாபட்டி கிராம பகுதிக்கு வந்துள்ளன. அவற்றில் ஒரு பெண் மான் வழிதவறி கிராமத்திற்குள் புகுந்தது. அதனை தெரு நாய்கள் விரட்டிச்சென்று கடித்துள்ளன. இதனை பார்த்த கிராம மக்கள் நாய்களை விரட்டி புள்ளி மானை காப்பாற்றினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் கார்த்திக் பாரஸ்டர் பாரதி ஆகியோர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை நாய்க்கடியால் காயமடைந்த மானுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின் ஒரு வயதுடைய அந்த மான் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் விடப்பட்டது….

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு