திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தில் களநீர் பயிற்சி சிறப்பு முகாம்: ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது

 

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தில் களநீர் பயிற்சி சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றிய குழு அலுவலகத்தில் 42 ஊராட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜீவா தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், வட்டார வளர்ச்சி மேலாளர் அண்ணாமலை, ஆய்வக உதவியாளர் பிரதாப், ஆய்வக வேதியாளர்கள் பவானி, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவர் ஜீவா விஜயராகவன், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமிவிலாசபுரம் ஊராட்சியை சேர்ந்த பொன்னாங்குளம் கிராமத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி வேலை திட்டத்தில் ரூ.7 லட்சத்து 48 ஆயிரம் செலவில் சமையல் அறை கூடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜீவா கேட்டுக்கொண்டார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்