திருவாரூர் மாவட்டத்தில் 4ம் தேதி சிறுதானிய உணவு திருவிழா

திருவாரூர், டிச. 1: திருவாரூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி சிறுதானிய உணவு திருவிழா நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பொதுமக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவுத்திருவிழா நடத்தப்படும் என தமிழகஅரசினால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் சிறுதானிய உணவுத்திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் சிறுதானிய உணவின் நன்மைகள், பயன்கள் குறித்த விவரங்களுடன் சிறுதானிய உணவுகளை சிறப்பாக தயார்செய்து உரிய குறிப்புகளுடன் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும வகையில் அரசுத்துறைகள், சுயஉதவிக்குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களாகிய அமைப்புகளால் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மேற்படி அமைப்புகளில் சிறப்பான பங்களிப்பினை வழங்குபவர்களில் முதல் மூன்று இடத்திற்கான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுத் தொகையும் மற்றும் நற்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இதில் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை